Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 2030ஆம் ஆண்டிற்குள் 91 வீதமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்


யாழ்ப்பாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில், 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் 90.66 இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாண மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்   யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் இதுவரை 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையும் போது 90.66 வீதமான வீடுகளுக்குக் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவு தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து, மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், குடிநீர் வழங்கப்பட்டுள்ள பகுதிகள், எதிர்காலத்தில் குடிநீர் வழங்கப்படவுள்ள பகுதிகள் மற்றும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான வரைபடங்களுடன் கூடிய விரிவான தகவல்களை அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கடற்தொழில் அமைச்சர்,  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், வீதிகளின் இரு பகுதிக்கும் குடிநீர் விநியோகக் குழாய்களைப் பொருத்துவதன் மூலமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, குடிநீர் விநியோகத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம், குழாய் வலையமைப்பின் விபரங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பிரதேச ரீதியாகப் பகிர்ந்து, திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.

No comments