யாழ்ப்பாணத்தில் அனர்த்த இடர் குறைப்புக்காக 30 திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு இதுவரை 38.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில், சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 334 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றுக்காக 651.96 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இதுவரை குறைந்தளவிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





.jpg)



No comments