காணி மற்றும் வீடு இல்லாத மக்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தென்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுவது போன்ற தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் கோரியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போதே , நாடாளுமன்ற உறுப்பினர் அவ்வாறு கோரினார். மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களுக்கான வீடமைப்பு வசதிகள் அற்ற மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
மேலும், இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான அரச காணிகள் உள்ளனவா என கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, சாவகச்சேரி பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை க்கு சொந்தமான காணி இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சாவகச்சேரி உள்ளிட்ட பொருத்தமான பகுதிகளில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இளங்குமரன் வலியுறுத்தினார்.





.jpg)



No comments