மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் கூட்டத்தின் இடைநடுவில் வெளியேற முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் எதுவித முடிவுமின்றி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் முடிந்தது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு தொடர்பில் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் பின்னர் அது தொடர்பில் பேசுவோம் என தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூட்டத்தின் இடைநடுவிலேயே வெளியேறினார்.
தொடர்ந்து கூட்டம் ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரின் வழிநடத்தலில் நடைபெற்று மதியம் இரண்டு மணியளவில் முடிவுக்கு வந்தது.









No comments