யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு டோக்கன் முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போதே புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்தமுறை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது அழைக்கப்படாதவர்களும் கலந்து கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டதால் அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் கூட்ட மண்டபத்திற்குள் நுழைவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதற்கமையவே கூட்ட அழைப்பாளர்களுக்கான டோக்கன்கள் கூட்ட மண்டப நுழைவாயிலில் வழங்கப்பட்டு டோக்கன்களின் அடிப்படையில் கதிரைகளுக்கு இலக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
இதனூடாக அழைக்கப்படாதவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும், கூட்டத்தின் ஒழுங்குமுறையைப் பேணக் கூடியதாக இருக்குமெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.





.jpeg)



No comments