Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சங்கிலியன் தோப்பு 65 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு


யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் தோப்பு 65 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

நாடளாவிய ரீதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் , "மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதிலொரு திட்டமாக சங்கிலியன் தோப்பு புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் , மாநகர சபை முதல்வர் வி.மதிவதனி ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சங்கிலியன் தோப்பு என்பது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments