Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்த இந்திய துணைத்தூதுவர்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி நேற்றைய தினம்  புதன்கிழமை உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அதன் போது, இந்திய - இலங்கை அறக்கட்டளையின் கீழ், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் பெற்றுக்கொண்டுள்ள கல்விசார் பரிமாற்றச் செயற்றிட்டத்துக்கான கடிதத்தை இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாயிமுரளி, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பியிடம் வைபவ ரீதியாகக் கையளித்ததுடன், பீடத்தின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள செயற்றிட்ட விபரங்களைப் பீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீப்காந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, துணைத் தூதுவர் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.  








No comments