அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனுர அரசே புதிய பயங்கரவாத சட்டமும் வேண்டாம் பழைய பயங்கர வாதச் சட்டமும் வேண்டாம் என்ற வாசகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பிய மகஜர் வாசிக்கப்பட்டது.














No comments