நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற அமுத விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாடசாலையின் 80ஆவது ஆண்டு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்ததுடன், 'கல்யாணி' மலரையும் வெளியிட்டு வைத்தார்.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர் தில்லைநாதன் நிதர்சனன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் , மாணவர்களின் ஆங்கில உரை நிகழ்வையும் 'பாஞ்சாலி சபதம்' கூத்து நிகழ்வையும் ஆளுநர் பார்வையிட்டார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் இந்து நாகரிகத்துறையின் முன்னாள் பேராசிரியர் மா.வேதநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை சிரேஷ;ட விரிவுரையாளர் பேராசிரியர் மகேஸ்வரக் குருக்கள் பாலகைலாசநாத சர்மா, தீவக வலயக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ப.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன் ஓய்வுநிலை அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்















No comments