யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தேவையுடைய மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் விசேட வேலைத்திட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தேவையுடைய மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

















No comments