Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செல்வச்சந்நிதி சூரன்போர் உற்சவம்: தொண்டைமானாறு நடைபாதைப் பாலம் திறப்பு!


வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின், கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான சூரன்போர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாக, தொண்டைமானாறு நீரேரியில் அமைந்துள்ள உவர்நீர் தடுப்பணையுடன் இணைந்த நடைபாதைப் பாலம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நாளை திங்கட் கிழமை மதியம் 12 மணி வரை திறக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும், அவரது பணிப்பின்படியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை தொடர்பில், திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் பொறியியலாளர் சி.விகிர்தன் அறிவித்துள்ளார்.

குறித்த தடுப்பணையுடன் இணைந்த நடைபாதைப் பாலம், செல்வச்சந்நிதி ஆலயத்தையும் நீரேரியின் மறுகரையையும் நேரடியாக இணைப்பதால், சூரன்போர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சுற்றுப்பாதையைத் தவிர்த்து இலகுவாக ஆலயத்தைச் சென்றடைய முடியும்

No comments