Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணி புதைகுழி விவகாரம் - கார்பன் பரிசோதனை மூலம் விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்ய சி.ஐ.டி திட்டமிடுவதாகக் குற்றச்சாட்டு


செம்மணிப் புதைகுழி தொடர்பான கால எல்லையை அறிவதற்கு ஏதுவாக கார்பன் பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் குற்றப்புலனாய்வு துறையினர் நீதிமன்றில் கோரி வரும் நிலையில், செம்மணிப் புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை நடத்தி விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திட்டமிடுகின்றது என குற்றம் சாட்டப்பட்டது. 

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகளின் போது, கார்பன் (C -14) பரிசோதனை ஊடாக காலத்தை கண்டறியமுடியும் என குற்றப்புலனாய்வு துறையினர் தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். 

கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதும் , குற்றப்புலனாய்வு துறையினர் கார்பன் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரிய போது , நீதிமன்று நவம்பர் 19ஆம் திகதி வழக்கு விசாரணையில் அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. 

அந்நிலையில் , கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதும் , குற்றப்புலனாய்வு துறையினர் கார்பன் பரிசோதனைக்கு அனுமதி கோரிய போது,  ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், செம்மணிப் புதைகுழி தொடர்பான கால எல்லையை அறியவேண்டும் என்ற கருத்துடன் தாம் உடன்படுவதாகவும் ஆனால், மரபணுப் பரிசோதனை ஊடாக மட்டுமே இந்த விடயம் அணுகப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த சமர்ப்பணங்களைச் செவிமெடுத்த நீதிமன்றம், கார்பன் பரிசோதனைக்கு உலகிலுள்ள மிகச்சிறந்த நான்கு இடங்களின் பட்டியலைத் தருமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது. 

அத்துடன், கார்பன் பரிசோதனை இல்லாமல் - அந்தப் பரிசோதனைக்கு மாற்றாகப் பயன்படக்கூடிய வேறு ஆய்வுகள் தொடர்பில் அடுத்த தவணையின்போது தெரியப்படுத்துமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் டிசெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

No comments