யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானம் , அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு சட்டவிரோத மதுபானத்தை உற்பத்தி செய்துகொண்டிருந்தவரை கைது செய்தனர்.
அத்துடன் அங்கிருந்து ஒரு லீட்டர் 800மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம் , அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments