Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

போதையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: சாவகச்சேரியில் பதற்றம்


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், தந்தையையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 

சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் அவர்களுக்கு பின்னால் வந்த கே.டி.எச் வாகனம் மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 

விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் , வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர். 

விபத்து சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தப்பி சென்ற வாகன சாரதி உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக ஊரவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

No comments