Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியே இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவரத் தடை


அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தற்காலிக தங்குமிடங்களில் வசிப்போருக்கு ,  வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

அதன் அடிப்டையில், அனர்த்த கால பகுதியில், கிராம மட்டங்களில் மேற்கொள்ளப்படும் உதவிச் செயற்பாடுகள் கிராம அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சுகாதார விதிமுறைகள் மற்றும் அரசாங்கச் சுற்றறிக்கைகளுக்கு அமைவாகவே உணவு விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், வெளியில் இருந்து சமைத்த உணவுகளைக் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

கிராம மட்டங்களில் சமைத்த உணவுகளை வழங்கும்போது சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு சமூக மட்ட அமைப்புகள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அதேவேளை, அனர்த்த அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், அராலி, தொண்டைமானாறு மற்றும் அரியாலை உவர் நீர் தடுப்பணைகளிலிருந்து வெளியேறும் நீர் கடலுக்குச் சென்று வீணாகாமல் உரிய அளவில் தேக்கி வைப்பதன் மூலம் அப்பகுதிகளில் நன்னீர் மட்டத்தைப் பேணுவதுடன், அதேவேளை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படாத வகையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் கலந்துரையாடப்பட்டது.

No comments