Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊர்காவற்றுறையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்குப் புதிய வீடு கையளிப்பு!


வீடுகளை கையளிப்பதுடன் எமது பொறுப்புகள் முடிவடையவில்லை. அந்த குடும்பத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த வாழ்வாதார உதவிகளையும் மேற்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் , ஊர்காவற்றுறை பிரதேசத்தில், முன்னாள் போராளியின் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டைக் கையளித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில் 

ஒரு தாய் தனது இரண்டு பிள்ளைகளையும் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர். அவரது மகளும் யுத்த காலத்தில் போராளியாகச் செயற்பட்டு, இன்று அங்கவீனமுற்ற நிலையில் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றார். 

மறுபுறம், அவரது மகனுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியாத நிலையில், அந்தத் தாய் பல்வேறு துயரங்களையும் இழப்புகளையும் மனதில் சுமந்துகொண்டு வாழ்ந்து வருகின்றார்.

யுத்தத்தின் காயங்களையும், இழப்புகளையும், வலிகளையும் தனது வாழ்நாள் முழுவதும் சுமந்துகொண்டு நிற்கும் இந்தத் தாயின் குடும்பத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையாக இந்த வீட்டைக் கையளிப்பதில் மனநிறைவடைகின்றேன்.

இந்த வீட்டைக் கையளிப்பதுடன் எமது பொறுப்பு முடிந்துவிடவில்லை. அடுத்த ஆண்டு இந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டக்கூடிய வகையில் பொருத்தமான வாழ்வாதாரத் தொழில் முயற்சி ஒன்றையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

ஒரு வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது பாதுகாப்பு, நிம்மதி, சுயமரியாதை மற்றும் புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது மனிதநேயப் பொறுப்பு என தெரிவித்தார்.






No comments