யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வறுத்தலைவிளான் பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்
கட்டுவான் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
விபத்து தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இன்றைய தினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளவெட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது









No comments