Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண்டைதீவு புதைகுழி வழக்கு : இராணுவ முகாம் விபரங்களை பெறப் பொலிஸார் நடவடிக்கை


யாழ்ப்பாணம் , மண்டைதீவு பகுதியில் புதைகுழிகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் , அக்கால பகுதியில் இராணுவ முகாம்கள் அமைந்திருந்தமை தொடர்பிலான விவரங்களை , யாழ். மாவட்ட படைத்தலைமையகத்திடம் கோரியுள்ளதாகவும், அதற்காக அறிக்கைகளை இராணுவ தரப்பிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என பொலிஸார் ஊர்காவற்துறை நீதிமன்றில் கோரியுள்ளனர். 

கடந்த 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன என சந்தேகிக்கப்படுகிறது. 

அதனை அகழ்வதற்கு அனுமதி கோரி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் , நிலையில் , சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு , சான்றுகள் , ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று யாழ்.மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் மேலதிக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

அதேவேளை , புதைகுழிகள் காணப்படும் இடமாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அக்கால பகுதியில் இருந்த இராணுவ முகாம் , அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினரின் விபரம் உள்ளிட்டவை தொடரில் யாழ் . மாவட்ட இராணுவ தலைமையகத்திடம் கோரியுள்ளதாகவும் , அந்த அறிக்கைகள் தமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனை பெற்றுக்கொள்ள மேலும் கால அவகாசம் தேவை என மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். 

அதனை தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது. 


No comments