Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரியில் பென்ஸ் காரில் வாள், நக்கிள்ஸ் கிளிப் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு , மூன்று தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ,நேற்றைய தினம் புதன்கிழமை மீண்டும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் 

சாவகச்சேரி கனகம்புளியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் சென்ற  "பென்ஸ்" ரக காரை வழிமறித்து சோதனையிட்டனர். 

அதன்போது காரினுள் நக்கிள்ஸ் கிளிப் , மான் கொம்பில் கைப்பிடி செய்த வாள் என்பவற்றுடன் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர் 

அதனை அடுத்து காரில் பயணம் செய்த இருவரையும் பொலிஸ் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இருவரும் அரசடி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் , ஒருவர் ஏற்கனவே ஐஸ் போதைப்பொருளுடன் கைதாகி , கடந்த 3 தினங்களுக்கு முன்னரே , யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. 

கைதான இருவரையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments