வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் யாழ் நகரில் உள்ள தமது அலுவலகத்தில் தடுத்து வைத்து மூன்று மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர்களான குட்டிமணி தங்கதுரைக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவ முயற்சித்த விவகாரம் தொடர்பாகவே இரண்டாவது தடவையாக சதீஸிடம் நேற்றைய தினம் சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணையில் சிலை நிறுவுவதற்கான பணம் மற்றும் நிதி மூலங்கள் எவ்வாறு கிடைத்தன என்பன தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி சதீஸின் வீட்டுக்கு ஏற்கனவே சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது தடவையாக விசாரணை நடத்தப்பட்டது.









No comments