Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவகச்சேரி பகுதியில் 16 கிராமிற்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர் கைது!


யாழ்ப்பாணத்தில் 16 கிராம் 410 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் சனிக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சாவகச்சேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் சோதனையிட்ட போது, அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

ஒருவரிடம் இருந்து 13 கிராம் 710 மில்லிக்கிராமும், மற்றையவரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிக்கிராமும், மூன்றாவது நபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிக்கிராமுமாக 16 கிராம் 410 மில்லிக்கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

அதனை அடுத்து மூவரையும் கைது செய்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளுடன் மூவரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக  சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் 

No comments