Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழர்களின் அறவழிப்போராட்டத்தை ஆவணப்படுத்தும் 'சத்தியாக்கிரக வரலாறு' நூல் யாழில் வெளியீடு


தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் அவற்றின் பின்னணியையும் ஆவணப்படுத்தும் ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வு யாழ்ப்பாணம்  தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் அறவழிப் போராட்டங்கள் வகித்த முக்கியத்துவத்தையும், அவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட உரிமை மறுப்புகளையும் பதிவு செய்யும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

தமிழர்களின் அரசியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் முக்கியமான முயற்சியாக வெளிவந்துள்ள இந்நூல், சத்தியாக்கிரகப் போராட்டங்களின் வரலாற்றையும் அவற்றின் அரசியல் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் ஆவணமாக அமைகிறது.

எழுத்தாளர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அகத்தியார் அடிகளார், வேலன் சுவாமிகள், சத்தியாக்கிரகி பேரின்பநாயகம், பேராசிரியர் கணேசலிங்கம், எழுத்தாளர் நிலாந்தன், இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், அப்துல் ஹபூர் நவாஸ்தீன், எம்.ஏ.எம் அசலாம் ஆகியோர் உரைகளை நிகழ்த்தினர். 

இந் நிகழ்வில் அரசியல் தலைவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்






No comments