Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். மாவட்டச் செயலகத்தில் இணையவழிச் சிறுவர் பாதுகாப்பு குறித்த விசேட செயலமர்வு


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலுத்தின் இணையப் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்  ஏ. எம். மிவ்ராஜ் வளவாளராகக் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினார்.

குறிப்பாக, கணினி, இணையம் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஊடுருவல்காரர்களிடமிருந்து(Hackers) பாதுகாக்கும் வழிமுறைகள், அதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் குற்றச்சம்பவங்களை இணையவழியில் முறைப்பாடு செய்வதற்கான நடைமுறைகள், முறைப்பாட்டின் பின்னரான நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரையறைகளை நிர்ணயிப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் தொழில்நுட்ப அறிவுசார் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிறுவனமயப்படுத்துதல், இணையவழி அச்சுறுத்தல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்தல் மற்றும் பரிந்துரை நடைமுறைகளைத் தரப்படுத்துதல் போன்ற விடயங்களும் இச் செயலமர்வில் முக்கியத்துவம் பெற்றன.

இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன் , உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் இ. செந்தூரன் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





No comments