Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சமாதி கோயில், பாடசாலை அமைந்த இடத்தில் மதுபான சாலையா? வலி. வடக்கில் போராட்டம்


யாழ்ப்பாணம் வலி. வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு எதிராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காங்கேசன்துறை பகுதியில் , பொன்னாலை - பருத்தித்துறை பிரதான வீதியில் , புதிதாக மதுபான சாலை ஒன்றினை நிறுவுவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ,  அதனை திறப்பதற்கான பூர்வாங்க வேலைகளை உரிமையாளர் முன்னெடுத்து வருகின்றார். 

குறித்த மதுபான சாலை அமையவுள்ள இடம் இன்னமும் மீள் குடியேற்றம் பூரணப்படுத்தப்படாத இடமென்றும் , அதனை அண்மித்த பகுதியில் சமாதி கோயில்கள் உள்ளன என்றும் ,அத்துடன் குறித்த பகுதியில் பாடசாலை ஒன்று காணப்பட்டதாகவும் ,  அது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் காணப்படும் நிலையில் , அதனை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுப்பட்டு வருவதனால் , அப்பகுதியில் மதுபான சாலையை திறக்க அனுமதிக்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 

அந்நிலையில் கடந்த மாதம் 08ஆம் திகதி குறித்த மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெல்லிப்பழை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து , அங்கிருந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று , மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது என பிரதேச செயலரிடம் மகஜரும் கையளித்துள்ளனர் 

இந்நிலையில் , குறித்த மதுபான சாலை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகளை அதன் உரிமையாளர் முன்னெடுத்து வரும் நிலையில் , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதுபான சாலை அமையவுள்ள இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.








No comments