Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

25 ஆண்டுகளுக்குப் பின் முறைப்படுத்தப்படும் யாழ். பாடசாலை வாகன சேவை!


யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட பாடசாலை வாகனச் சங்கத் தலைவர் கோகுலன்  தலைமையில், சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் இக்கூட்டம் இடம்பெற்றது. 

கடந்த 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலை சேவையில் ஈடுபட்டு வரும் பல தனியார் வாகனங்கள் இதுவரை முறையான பதிவுக்கு உட்படாமல் சேவையாற்றி வருகின்றன. 

அத்துடன் மாவட்டத்தில் இயங்கி வந்த சங்கமும் பதிவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், சேவையை முறைப்படுத்தும் நோக்கில் அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் அமைந்துள்ள தாய்ச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பாடசாலை சேவைக்கான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் பதிவு தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில், யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகன உரிமையாளர்களுக்கும் சங்கத்தின் ஊடாக தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் போக்குவரத்துச் சேவையைப் பாதுகாப்பானதாகவும், பொறுப்புமிக்கதாகவும், முறையான அங்கீகாரத்துடனும் முன்னெடுப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது. 





No comments