காலமான எம்.கே சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வல்வெட்டித்துறை வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை இன்றைய தினம் திங்கட்கிழமை மூடியிருந்தனர்.
அத்துடன் நகர்பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு , நகர் பகுதியே சோகமாயமாக காட்சியளித்தது
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமான வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலமானார்.
அவரது இறுதி கிரியைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது
அதன் போது வல்வெட்டித்துறை நகர வர்த்தகர்கள் தமது கடைகளை மூடியதுடன் , கறுப்பு கொடிகளையும் பறக்க விட்டிருந்தனர்.
வல்வெட்டித்துறை நகர் எங்கும் கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு , அஞ்சலி பதாகைகள் வைக்கப்பட்டு ,நகர் பகுதியே சோகமயமாக காட்சியளித்தது.












No comments