Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெல்லியடியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் - 06 பேர் கைது


யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்திய 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நெல்லியடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டில் இருந்த தாய் , தந்தை , மகன் மற்றும் மகள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நாடத்தி விட்டு தப்பி சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் தாக்குதலாளிகளில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். 

தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் தெரியாத நிலையில் , கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , தாக்குதலில் ஈடுபட்ட ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்/

No comments