Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசியப் பொருளாதாரத்தில் வடக்கின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்: வடமாகாண ஆளுநர் வலியுறுத்தல்!


வடக்கு மாகாணத்தின் தேசியப் பொருளாதாரத்துக்கான பங்களிப்பை  10 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனை அரச நிறுவனங்களால் மாத்திரம் அடைய முடியாது. அதற்கு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், 'Let’s Trade! – Global Trade Revolution Conference' எனும் சர்வதேச வர்த்தக மாநாடும், 'CNE Economic Times' இரண்டாம் தொகுதி – 2026 வெளியீட்டு நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றன.  

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

தேசியப் பொருளாதாரத்தை உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாளர்களுக்கு 67,687 மில்லியன் ரூபா ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளதுடன், சுமார் 174 பில்லியன் ரூபா சலுகைக் கடன்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது 

இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி உற்பத்தியையும் ஏற்றுமதியையும் விரிவுபடுத்துவதற்கு தொழில்முயற்சியாளர்கள் தயாராக வேண்டும் 

வடக்கு மாகாணத்தின் தேசியப் பொருளாதாரத்துக்கான பங்களிப்பை தற்போதைய 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது 

இதனை அரச நிறுவனங்களால் மாத்திரம் அடைய முடியாது. உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனம் முன்மொழிந்துள்ள வகையில், மாகாணத் தொழில்முயற்சியாளர்களையும் ஏற்றுமதியாளர்களையும் 2028ஆம் ஆண்டு சர்வதேச வர்த்தகக் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வது வரவேற்கத்தக்க முயற்சி 

அதன் மூலம் உலகச் சந்தைகளையும் நவீன தொழில்நுட்பங்களையும் நேரடியாக அறிந்துகொள்வதற்கும், சர்வதேசக் கொள்வனவாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார்.

No comments