Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க CCTV திட்டம்


நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருத்தப்படவுள்ள CCTV கமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் காட்சிகளைப் பயன்படுத்தி, பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் நவீன கண்காணிப்பு முறைமையொன்றை அறிமுகப்படுத்தப் பொலிஸ் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் பொலிஸ் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தாக்கப்பட்டாலோ அல்லது துன்புறுத்தப்பட்டாலோ அதற்கான பூரண பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்

No comments