அநுராதபுரம் – ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை சிறுநீர் மாதிரிப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி காலை, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில், ரம்பேவ சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சாரதி உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் 76 பயணிகள் காயமடைந்தனர்.
ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றது.
விபத்துக்குள்ளான, கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தின் பின்புறத்தில் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றின் சாரதியும் மூன்று பயணிகளும் உயிரிழந்தனர்
குறித்த விபத்தில் உயிரிழந்த சாரதியின் சிறுநீர் பரிசோதனையில் சாரதி, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கஞ்சா மற்றும் மதுபானம் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.









No comments