கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் பார்வைக்காக நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த நினைவாலயம் தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.எனவே, தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து தமது தேசிய மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்யுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.













No comments