மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அல்லது வெளியே ஒன்றுகூடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அல்லது விளையாட்டு நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
அனைத்து பல்கலைக்கழகங்களின் இறுதி வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் இந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இது ஓகஸ்ட் 15 ஆம் திகதி முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவ பீடப் பரீட்சைகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.
No comments