Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறிதரனின் ஆதரவாளர்கள் அடாவடி - பெண்ணொருவர் காயம்!


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஆதரவாளர்கள் பெண் உட்பட இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வடமாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா தலைமையில் நேற்று உருத்திரபுரம் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறிதரனுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சிவஞானம் சிறிதரனின் பிரச்சார துண்டுப்பிரசுரங்கள் ஒட்டும் நடவடிக்கையும் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் கதவில் சுவரொட்டியை ஒட்ட முனைந்த போது, வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு, நாங்கள் அனைத்து வீடுகளிலும் ஒட்டிக்கொண்டு வருகிறோம். உனக்கு மட்டும் தனிச்சட்டமா? இங்கு ஒட்டுவோம் என ஆதரவாளர்கள் அடாவடியில் ஈடுபட்டனர்.

இரு தரப்பிற்கும் தர்க்கம் உச்சமாக, கோபமடைந்த ஆதரவாளர்கள் மூவரும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வீட்டின் உரிமையாளரை தாக்கி, அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். அத்துடன் வீட்டின் சொத்துக்களிற்கும் சேதம் விளைவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பெண்மணி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் அச் சம்பவத்தை தேர்தல் வன்முறைச் சம்பவம் என்ற வகைக்குள் பதிவு செய்யாமல், சிறு குற்ற பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தேர்தல்கள் கண்காணிப்பு குழுவினரிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

No comments