மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கி பாவனையாளர்களின் சுமையை அரசு சுமக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊரடங்கு உத்தரவின் போது மின்சார கட்டணப் பட்டியல் பிரச்சினைகள் தொடர்பான ஐந்து உறுப்பினர்கள் குழு வழங்கிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையால் பரிந்துரைக்கப்பட்டவற்றைத் தாண்டி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை திறைசேரிக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அரசால் ஆலோசனை வழங்கப்பட்டமையால் அதிகரித்த மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதியை திறைசேரியின் ஊடாக செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு நபர் ஏற்கனவே அதிக பணம் செலுத்தியிருந்தால், அவர்கள் அடுத்த கட்டணத்தை திருப்பிச் செலுத்தவோ அல்லது செலுத்தவோ முடியும்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த சலுகை காலம் வழங்க முன்மொழியப்பட்டது என்றும் அமரவீரா கூறினார்









No comments