நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத படுகொலை நினைவேந்தலை நடத்த எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று மானிப்பாய் பொலிஸாரால் முன்வைத்த கோரிக்கையை மல்லாகம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்தக் கோரிக்கை மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை, சென். பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150 இற்கும் அதிகமானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்து மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அதேவேளை எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரியிருந்தனர். இந்த மனுவே இன்று நிராகரிக்கப்பட்டது.
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை வியாழக்கிழமை நினைவுகூரப்படவுள்ளது.









No comments