Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஈழத்து கலைஞர்களின் “கனவே நீ” காணொளிப்பாடல் வெளியானது!



SS Jaffna சுதர்சன் அவர்களின் தயாரிப்பில் RJ Jinu வின் இயக்கத்தில் சஞ்ஜய், மிதுனா நடிப்பில் உருவான “கனவே நீ” காணொளி பாடல் இன்று (15) மாலை “படைப்பாளிகள் உலகம்” யு-ரியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

சமீலின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை செல்வா முகுந்தன் எழுதியுள்ளார். சமீலுடன் இணைந்து இப்பாடலை அப்ரா லதீப் பாடியுள்ளார். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவினை ரெஜி செல்வராஜா. படத்தொகுப்பு சசிகரன் யோ வும் செய்துள்ளனர். 

அழகான காதல் பாடலாக வெளிவந்துள்ள இதில், சஞ்ஜய் – மிதுனாவின் நடிப்பு இளமைத் துள்ளலாக உள்ளது. முக்கியமாக இப்பாடலில் கலை இயக்கம் பாராட்டத்தக்கது. கலை இயக்குனர்களாக RJ Jinu, Skv Vinshan, SN Ragu ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

திருமணக் காட்சி, பிறந்த நாள் காட்சி என நிறைய அர்ப்பணிப்புடன்  இந்தப் பாடலை இயக்கியுள்ளார் ஆர்ஜே ஜினு. ரெஜி செல்வராஜாவின் கமெராக் கண்களும் “அட!” போட வைக்கின்றது. மொத்தத்தில் “கனவே நீ” நிறைவான ஒரு காணொளிப் பாடல்.


காணொளி பாடலை பார்வையிட கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். 

https://www.youtube.com/watch?v=8IdpIFywBwM&fbclid=IwAR1HWYiA9Y2DNjOJY6MIvEEEPZrYEcbIvirrF_hor_biaGolC7Y8mvBzdxQ

No comments