Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Tuesday, July 22

Pages

Breaking News

லொறியால் மோதியவரையே பொலிஸ் உத்தியோகஸ்தர் தாக்கினார்! (காணொளி இணைப்பு)

வேகமாக வந்து கனரக வாகனம் வீதி கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதியதலையே சாரதியை பொலிஸ் உத்தியோகஸ்தர் வீதியில் வைத்து தாக்கியுள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. 

மகரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னிப்பிட்டிய வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் கனகர வாகன சாரதியை வீதியில் வைத்து மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த சாரதி மீது மல்யுத்த (ரெஸ்லிங்) போட்டிகளில் தாக்குவது போன்று எகிறி குதித்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். குறித்த காணொளி வைரலாகி பலரும் தமது கடும் கண்டனங்களை தெரிவித்ததை அடுத்து , குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தி வந்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளார். அதானல் கோபமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சாரதியை வீதியில் வைத்து தாக்கியுள்ளார். 

இதேவேளை சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.