யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவில் தலா ஒருவரும் கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 408 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர் இருவருக்கும் , (கேகாலை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவரும் , தெல்லிப்பழை வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவருக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் , (சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்) பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் என 07 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
No comments