Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இருவர் மட்டுமே வெளியில் செல்லலாம்; புதிய கட்டுப்பாடுகள் அமுல்!


நாட்டில் கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் கோவிட் -19 இன் நிலை அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலை மாறுபடும் மற்றும்
இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை மாற வேண்டும் என்று சுற்றறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தச் சுற்றறிக்கை வரும் மே 31ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும்.

அதன்படி ஒவ்வொரு குடும்பத்திலும் இருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லவது வேலைக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் ஆசனங்களுக்கு அமைய பயணிகள் அனுமதிக்கப்படவேண்டும்.

கார் மற்றும் முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அத்தியாவசிய சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களே அனுமதிக்கப்படவேண்டும். 

ஏனைய பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதிக்கப்படவேண்டும்.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வு மண்டபங்களில் ஆசனங்களுக்கு அமைய 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடியது 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

நிகழ்வுகள் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் அவரது கண்காணிப்பின் கீழ் நடத்தப்படவேண்டும்.

வர்த்தக நிலையங்களுக்குள் ஒன்றரை மீற்றர் இடைவெளியில் வாடிக்கைகள் அனுமதிக்கப்படவேண்டும்.

சந்தைகளில் கொள்ளவில் 50 சதவீத வியாபார நடவடிக்கைகள் இடம்பெற அனுமதிக்கப்படவேண்டும்.

சிறைச்சாலைகள் கைதிகளைப் பார்வையிட அனுமதியில்லை.

பாடசாலைகளில் வகுப்பறையில் 50 சதவீத மாணவர்களுக்கு அனுமதி.

இறுதிச் சடங்குகளில் ஆகக் கூடியது 25 பேருக்கு மட்டுமே அனுமதி.

No comments