Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா ; குருக்கள் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தலில்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 

பருத்தித்துறை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

அதனை அடுத்து அவருடன் தொடர்பை பேணியவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.  www.tamilnews1.com 

அதன் போது குறித்த நபர் மரண சடங்குக்கு சென்றிருந்ததை அறிந்து , மரணமானவரின் குடும்பத்தினர் , மரண சடங்கில் கிரிகைகள் செய்த குருக்கள்  அவரது உதவியாளர் உள்ளிட்ட 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்களை அடையாளம் காணும் பணிகளையும் முன்னெடுத்துள்ளனர். www.tamilnews1.com 

No comments