தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவன் உள்ளிட்ட இருவரை பிணையில் செல்ல புத்தளம் பதில் நீதவான் விடுத்துள்ளார். www.tamilnews1.com
வாகரை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கற்பிட்டி நுரைசேலை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் , சிறுவனின் அலைபேசியில் புலிகளின் தலைவரின் ஒளிப்படம் உள்ளதாக நுரைசேலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவனின் அலைபேசியை பொலிஸார் பரிசோதித்த போது அதில் ஒளிப்படம் இருந்ததால் , சிறுவனையும் அவனுடன் தங்கியிருந்த 21 வயது இளைஞனும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். www.tamilnews1.com
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் புத்தளம் பதில் நீதவான் முன்னிலையில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டனர். அதனை அடுத்து இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவித்து வழக்கினை ஒத்திவைத்தார். www.tamilnews1.com









No comments