தொண்டமானாறு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கஞ்சா போதை பொருள் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊரிக்காடு இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்கரை பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தினர். www.tamilnews1.com
அதன் போது பொதி செய்யப்பட்ட நிலையில் கடற்கரை பற்றை காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 கிலோ கஞ்சாவை மீட்டனர்.
இது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவித்த இராணுவத்தினர் மீட்கப்பட்ட கஞ்சா போதை பொருளையும் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். www.tamilnews1.com









No comments