Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொவிட் -19 - இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிப்பு


கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேண்டும் என்று வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா நோய் தொற்றினால் இதுவரை 5க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பன்னிரண்டு வயதைத் தாண்டிய சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியமாகும். பல்வேறு நாடுகள் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை பிள்ளைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் கூடுதலான பொறுப்பு பெற்றோரைச் சாரும் என்றும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

No comments