கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் நிலமை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை 6 இரவு அஞ்சல் சேவைகள் உள்பட 20 தொடருந்து சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை, திருகோணமலை, காங்கேசந்துறை, மிரிகாம, அம்பேபுசா மற்றும் வேயங்கொட தொடருந்து நிலையங்கள் மற்றும் அந்த நிலையங்களிலிருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் பல தொடருந்துகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான தபால் தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இரண்டு சேவைகள் மட்டுமே யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









No comments