Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

'ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் புகழ் கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு!


 'ஆட்டோகிராஃப்' பட புகழ் பிரபல பாடகர் கோமகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

'ஆட்டோகிராஃப்' படத்தில் ’'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே!’' என்ற பாடல் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் பாடகர் கோமகன். இந்த பாட்டில் 'மனிதா உன் மனதைக் கீறி விதை போடு உரமாகும்..' என்ற வரிகளைப் பாடியிருப்பார். www.tamilnews1.com 


பல்வேறு கச்சேரிகளில் பாடிவந்த இவருக்கு இயக்குனர் சேரன் தன்னுடைய படத்தில் வாய்ப்பு வழங்கினார். www.tamilnews1.com 

நாகர்கோவிலை பூர்விகமாகக் கொண்ட பார்வை மாற்றுத்திறனாளியான இவர் சென்னை மாதவரத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். அத்துடன் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வந்தார்,

பின்னர் சேரன் பட வாய்ப்புக்குப் பிறகு சினிமாவில் ஒரு சில படங்களில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது கச்சேரியும் நடத்தி வந்தார்.

இதனிடையே சென்னை ஐசிஎப்-இல் அரசு வேலை கிடைத்தது. சமீபத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். www.tamilnews1.com 

இந்நிலையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை  1 மணியளவில் காலமானார். www.tamilnews1.com 

No comments