உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது வலிப்பு நோய் காரணமாக கறி சட்டிக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராக பணிபுரியும் அல்வாய் வடக்கை சேர்ந்த இராசையா தீபனகுமார் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு கறி சட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.
அதனையடுத்து அங்கிருந்த ஏனைய பணியாளர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.









No comments