Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தனித்து 122 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 157 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஆட்சியமைக்கத் தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க முன்னிலை வகிப்பதால் வெற்றி வாய்ப்பு தி.மு.க.விற்கு உறுதியாகியுள்ளது. பத்து வருடங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமையவிருக்கிறது. மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலைப் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூகவலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேனி தொகுதியில் 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments