பலாங்கொடை ராசாகலை வீதியில் எல்லேவத்த பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 150 அடி பள்ளத்தினுள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். தேயிலை தொழிற்சாலை ஊழியர்களை வீடுகளில் விட்டுவிட்டு திரும்பும் போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது , பேருந்தினுள் சாரதி மாத்திரமே இருந்த நிலையில் , விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






No comments