யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மயானத்தில் கல்லறையை தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை இருவர் தோண்டி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வல்வெட்டித்துறை பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். www.tamilnews1.com
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , நகைகளுடன் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் நகைகளை எடுக்கவே கல்லறையை தோண்டியதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர். www.tamilnews1.com
இருவராலும் அகழப்பட்ட கல்லறைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். www.tamilnews1.com







No comments