தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பியுமி ஹன்சமாலியுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரினால் கடந்த வாரம் பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. www.tamilnews1.com
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்த நிலையில் அவர்கள் உள்ளிட்ட 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். www.tamilnews1.com
இந்நிலையில் அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 6 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
இவர்களை இன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
www.tamilnews1.com









No comments